கல்முனைப் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் தலைமையில் தயாரிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐந்து ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் கல்முனைப் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பிரதம கிளார்க் எம்.எம்.எம்.ஹசன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே. எல்.யாசீன் பாவா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித் தொகையினை வழங்கி வைத்தனர்.
இத்திட்டத்தினை தயாரித்து செயற்படுத்துவதற்கு உதவிய அனைத்து திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கும்
உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment