எம்.எச்.எம்.றஸான்-
நேற்று 2020.11.12ம் திகதி வியாழக்கிழமை முன்னாள் அமைச்சரும் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அக்கரைப்பற்று சாஹிரா பாடசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பாடசாலையின் கள நிலைமைகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இக்கள விஜயத்தில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.காசிம், உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜே.ஜெமீல், முன்னாள் ஆயிஷா மகளிர் கல்லூரி அதிபர் MAC. அப்துல் ஹைய்யு, எமது பாடசாலையின் EPSI இணைப்பாளர் எம்.ஏ.தாஹிர், எமது பாடசாலையின் SDEC செயலாளர் ஏ.ஆர்.தாஜூதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment