குறித்த இடங்கள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன

M.I.இர்ஷாத்-

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.
இராணு தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (09) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில்
• மட்டக்குளி பொலிஸ் பிரிவு
• முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
• புளுமெண்டல் பொலிஸ் பிரிவு
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• கரையோர பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு
• தெமட்டகொட பொலிஸ் பிரிவு
• வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

கம்பஹா மாவட்டம்
• வத்தளை பொலிஸ் பிரிவு
• பேலியகொடை பொலிஸ் பிரிவு
• கடவத்த பொலிஸ் பிரிவு
• ராகம பொலிஸ் பிரிவு
• நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• பமுனுகம பொலிஸ் பிரிவு
• ஜா-எல பொலிஸ் பிரிவு
• சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
• ஹொரணை பொலிஸ் பிரிவு
• இங்கிரிய பொலிஸ் பிரிவு
• வேக்கட கிராம உத்தியோகஸ்தர் பிரிவு

குருநாகல் மாவட்டம்
• குருநாகல் மா நகர எல்லை பகுதிக்குள்
• குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

கேகாலை மாவட்டம்
• மாவனல்ல பொலிஸ் பிரிவு
• ரூவான்வெல்லை பொலிஸ் பிரிவு

இதேபோன்று கீழ் குறிப்பிட்ட வீடமைப்பு திட்டத்தில் கொவிட் – 19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் பொது மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவது தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

• மெத்சந்த செவன
• மிஹிஜய செவன
• மோதர ரன்மிண செவன
• சிரிசந்த உயன தெமட்டகொட
• மாளிகாவத்தை வீடமைப்பு

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :