கொரோனா ஜ‌னாஸாக்க‌ளை அட‌க்க‌ அனும‌தி. அனும‌தி இன்னும் இல்லை. எது ச‌ரி?- உல‌மா க‌ட்சி.




கொரோனா ஜ‌னாஸாக்க‌ளை அட‌க்க‌ம் செய்ய‌ இன்ன‌மும் அர‌சு வ‌ர்த்த‌மாணி மூல‌ம் அறிவிக்க‌வில்லை என்ப‌து உண்மை.
 
ஆனாலும் இதுவ‌ரை அட‌க்க‌ம் செய்வ‌து ப‌ற்றி சுகாதார‌ துறையே முடிவெடுக்க‌ வேண்டும் என‌ சொன்ன‌ அமைச்ச‌ர‌வை, நீதி அமைச்ச‌ரின் வேண்டுத‌லை ஏற்று அட‌க்க‌ம் செய்ய‌வும் அனும‌திக்க‌லாம் என்ப‌தை கொள்கை அள‌வில் ஏற்றுக்கொண்டுள்ள‌து என்ப‌து உண்மை.
ஜ‌னாதிப‌தியும் அட‌க்க‌ம் செய்ய‌லாம் என்ற‌ க‌ருத்தை ஏற்றுக்கொண்டுள்ள‌மைதான் இங்கு ஏற்ப‌ட்டுள்ள‌ திருப்ப‌ம். அது ஒரு சாத‌க‌ நிலை.
அர‌ச‌ நேர‌டி க‌ட்சியில் ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ எந்த‌வொரு முஸ்லிம் உறுப்பின‌ரும் இல்லாத‌ நிலையில் நீதி அமைச்ச‌ர் த‌னியாக‌ நின்று முன்னெடுக்கும் போராட்ட‌ம் இலேசுப்ப‌ட்ட‌த‌ல்ல‌.
இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளின் அதிக‌ வாக்குக‌ள் பெற்ற‌ ஹ‌க்கீம் கூட‌ நீதி இல்லாத‌ நாட்டில் நீதி அமைச்ச‌ராக‌ இருந்த‌தாக‌ ம‌க்க‌ள் சொல்வ‌துண்டு. அவ‌ர‌து நீதி அமைச்சால் இந்த‌ ச‌மூக‌ம் எந்த‌ ந‌ன்மையும் அடைய‌வில்லை.
ஆனால் த‌ன‌க்கு ஆத‌ர‌வாக‌ பேச‌ இன்னுமொரு முஸ்லிம் அமைச்ச‌ர் கூட‌ இல்லாத‌ நிலையில் நீதி அமைச்ச‌ர் அலி ச‌ப்ரியின் நிலை எப்ப‌டி இருக்கும் என்று நாம் சிந்திக்க‌ வேண்டும்.
அந்த‌ வ‌கையில் இது விட‌ய‌த்தில் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌வை கொள்கைய‌ள‌வில் இண‌ங்க‌ வைத்துள்ளார்.
இதைத்தான் தேர்த‌ல் கால‌த்தில் நாம் சொன்னோம். கோட்டாப‌ய‌ 69 ல‌ட்ச‌ம் வாக்குக‌ள் பெற்று வெல்வார் என்ப‌தால் முஸ்லிம் ச‌மூக‌ம் கோட்டாவை ஆத‌ரிக்க‌ எம்மோடு இணைய‌ வேண்டும் என‌.
புத்தியை பாவிக்காத‌ ச‌மூக‌ம் இன்று ந‌டுக்க‌ட‌லில் நின்ற‌ போதும் ந‌ம‌க்குரிய‌ ஒரேயொரு துடுப்பாக‌ உள்ள‌ அலி ச‌ப்ரிக்கு துணை நிற்போம்.
ம‌னித‌ர்க‌ளுக்கு ந‌ன்றி சொல்லுங்க‌ள். வானில் இருப்ப‌வ‌ன் உத‌வி செய்வான்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :