வைப்பகப்படம் |
ஒரே நாடு - ஒரே சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறினாலும் பிள்ளையானுக்கு ஒரு சட்டமும், ரிஷாட் பதியூதீனுக்கு இன்னுமொரு சட்டமும் இன்று காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாரளுமன்றத்தில் உரையாற்றும் போது:-
இன்று ஒரே நாடு ஒரே சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்து வருகின்றார். ஆனால் இந்த நாட்டில் இருவேறு சட்டங்கள் இருவேறு தரப்பினருக்கு பயன்படுத்தப்படுகின்றது.
விளக்கமறியல் கைதியாகவுள்ள பிள்ளையான் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து உலா வருகின்றார். அவர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சென்று கலந்து கொள்கின்றார். மேலும் அவர் கட்டிடத் திறப்பு நிகழ்வுகளிலும் தலைமைதாங்கி கட்டிடங்களைத் திறக்கின்றார்.
ஆனால் இன்று விளக்கமறியலிலுள்ள பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு பாரளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுதான் கோட்டாபயவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற கொள்கையா? இதற்காகவா 69 லட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்துள்ளார்களா? அப்படியானால் வாக்களித்த அவர்கள் இன்று ஏமாற்றமடைந்து விட்டார்கள் என்றார்.
0 comments :
Post a Comment