கூட்டுறவுத் திணைக்கள சேவைகளை தடங்கலின்றி முன்னெடுத்துச் செல்ல ஆளுநர் முஸம்மில் நடவடிக்கை

எம்.ஏ.ஷீனத்-

கொவிட் தொற்று நிலவும் இக்காலப்பகுதியில் கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகளை எவ்வாறு சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் கலந்துரையாடலொன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஊவா மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துடன் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பொதுமக்களுக்குப் பற்றாக்குறையில்லாமல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் கூட்டுறவுத் திணைக்களம் முகங்கொடுக்கும், வாடிக்கையாளர் கொள்வனவு செய்யும் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள், போக்குவரத்து வசதிகள், ஊழியர்கள் சமூகமளிப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரச்சினைகளுக்குக் கூடிய விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, திணைக்களத்தின் வேலைத்திட்டங்களைத் தடங்கலின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது ஆளுநர் முஸம்மில் ஆலோசனை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர், கூட்டுறவு அபிவிருத்தி சபையின் ஆணையாளர், ஊவா கூட்டுறவுச் சங்கத்தின் கணக்காளர், கூட்டுறவுச் சங்கங்களில் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :