சமூகப் பொறுப்போடு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு!

எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டதனை தொடர்ந்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்த நிலையில் இம்மக்களின் செய்திகளை சமூகப் பொறுப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டுசெல்லும் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்களில் பிராந்திய செய்தியாளராக பணியாற்றும் இப்பிரதேசத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரனின் கவனத்திற்கு கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்கள் விடுத்தவேண்டுகொளுக்கினங்க இன்று (6) அப்பகுதி
ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்களும் ,கைகளை தொற்று நீக்கும் திரவங்கள், முகக்கவசங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் மேம்படுத்தல் பணிகளில் செயற்பட்டுவரும் சேகிள் தன்னார்வுத் தொண்டு நிறுவன இளம் பெண்கள் பிரிவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேகிள் அமைப்பின் பிரதிநிதிகளான அஜானி காசிநாதர் மற்றும் வசந்தகலா பிரதீபன் எஸ்.ஏமல்டா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சேகிள் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவணமானது மட்டக்களப்ப மாவட்டத்தில் குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் மேன்படுத்தும் பணிகளுடன் அனர்த்தகால உதவிகளையும் மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது.

கடந்தவாரம் தொழில் பாதிக்கப்பட்ட சிகையலங்கார உரிமையாளர்களுக்கு என இரண்டு இலச்சத்தி இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான 150 உணவுப்பொதிகளை மாவட்ட செயலாளரிடம் வழங்கிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :