கந்தளாயிலும் பாடசாலைகள் ஆரம்பம்,குறைந்தளவிலான மாணவர்கள் வருகை.


எப்.முபாரக் -

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பமானது.

திருகோணமலை கந்தளாய் வயலக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம்(23) ஆறாம் ஆண்டிலிருந்து 13 ஆம் ஆண்டு வரை வகுப்புகள் ஆரம்பமானது.

மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு முகக்கவசம் அணிந்து பாடசாலை சமூகமளித்ததோடு,பாடசாலையினுள் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு மாணவர்கள் சமூக இடைவெயை பேணி செயற்பட்டதையும் கொட்டும் மழையின் மத்தியிலும் குடைகளை பிடித்து சமூகமளித்தனர்.

பாடசாலையில் குறைந்தளவிலான மாணவர்களும்,ஆசிரியர்களும் சமூகமளித்ததை காணக்கூடியதாகவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :