இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இரண்டாவது முறையாக இன்று இலங்கை விஜயம்


J.f.காமிலா பேகம்-

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியாஅமட்திதி ( Mariya Ahmed Didi ) மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இதன்படி இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று வெள்ளிக்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

உயிர்க்குமிழி பாதுகாப்பு நடைமுறை மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றை பின்பற்றி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு விஜயம் செய்யும் இரண்டாவது முறை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய விஜயத்தின் போது அவர் இலங்கை மற்றும் மாலைதீவு பிரதிநிதிகளுடன் தனித்தனியான சந்திப்பை மேற்கொள்வாரா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது போன்றதொரு சந்திப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் இதன்போது அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஸ இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :