ஏறாவூர் நவீன பொதுச் சந்தை நிருமாணம் ஆரம்பம்- நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

ஊடகப்பிரிவு, சாதிக் அகமட்-

றாவூர் நவீன பொதுச் சந்தையின் கட்டுமானப் பணிகள் அரசின் ஒப்புதலோடு உடனடியாக மீளத் துவங்கும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக வெள்ளிக்கிழமை 06.11.2020 கருத்துத் தெரிவித்த அவர் ஏறாவூர் பொதுச் சந்தை சகல விதமான கட்டுமான நியமங்களுக்குட்டு இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் நிருமாணிக்கப்பட்டு வரும் வேளையில் அது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் முறைப்பாடுகளால் தடைப்படுத்தப்பட்டதாகும்.

ஆனால் அந்த அநாகரிக செயட்பாடுகள், சூழ்ச்சிகளையும் முறியடித்து ஏறாவூர் பொதுச் சந்தையின் நிருமாணப் பணிகள் உடனடியாகத் துவங்குவதற்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் இந்த சந்தைக் கட்டிடத் தொகுதியின் நிருமாணப் பணிகளை உயர் தரத்திலும் சிறப்பானதாகவும் பூர்த்தி செய்வதில் அக்கறை கொண்டுள்ளது.

அதனடிப்படையில் இந்த கட்டிட நிருமாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும் அது மிக விரைவில் பொது மக்களின் பாவனைக்காக சந்தை வியாபாரிகளிடம் கையளிக்கப்படும்.”
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :