கொரோனா தொற்றிலிருந்து விடுபட மலையகப்பகுதியில் சமய வழிபாடுகள்

க.கிஷாந்தன்-

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடும் மற்றும் உலக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த வைரஸினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு வைத்திய சக்தி மற்றும் போதுமானதாக அமையாது என்பதனால் எமது தெய்வீக சகத்தியின் மீது நம்பிக்கை வைத்து நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபகச நாட்டு மக்களிடம் சமயத்தலைவர்களிடமும் கொரோனா தொற்று நீங்க பூஜை வழிபாடுகளில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தார்.

அக்கோரிக்கைக்கு அமைய மலையகத்தின் இந்து மற்றும் கிறிஸ்த்தவ இஸ்லாமிய ஆலயங்களில் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவைகயில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

விநாயகர் வழிபாடு விசேட பிணி நீக்கும் 27 மூலிகைகளை கொண்ட விசேட யாக பூஜை, இடம்பெற்றதுடன் அதில் 108 தடவை மிருதஞ்ச பெருமானுக்கு நாம அர்ச்சினை இடம்பெற்றன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் பூஜை வழிபாடுகள் சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை பகதர்களே கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

பூஜை வழிபாடுகளை கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய பிரதம குரு. ஸ்கந்தராஜா சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.

அதனை தொடர்ந்து கொரோனா ஒழிய வேண்டும் என விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வூக்கு கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், உட்பட பிரதேச வாசிகள் பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :