கொரோனாவுக்கு மத்தியிலும் பொத்துவிலில் ஆறு வீடுகள் கையளிப்பு!


காரைதீவு சகா-

பொத்துவில் பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கி;ன்ற வேளையிலும் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மக்களுக்கான சேவையினை எவ்வித தடங்கலுமின்றி செய்துவருகிறார்.

அந்த அடிப்படையில் 'கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 6 வீடுகள் நேற்று உரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

அவ்வீடுகளை பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் சுகாதாரமுறைப்படி சென்று பயனாளிகளிடம் வழங்கிவைத்தனர்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய உற்பத்தித்திறன் மிக்க ஒரு பிரஜை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் ஒரு குடும்பத்தை உருவாக்கும் நோக்கில் சௌகரியமான ஒரு வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதன் மூலம் பொருளாதார இலக்கினை அடைந்து கொள்வதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு நிலையான வெற்றியை பெற்றுக் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நோக்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டிடப் பொருட்கள் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேராவின் நெறிப்படுத்தலில் நாடு பூராகவும் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :