தெற்கு போன்று வடக்கு கிழக்குக்கும் சம அளவான சேவை தமிழ் தரப்பும் மகிழ்ச்சி -டிலான்

ரசாங்கம் தெற்கிற்கு கொடுக்கும் முன்னுரிமை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கும் கொடுக்கின்றது. இதனை தமிழ் தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் தனதுரையில் மேலும் கூறுகையில்,

கொரோனாவிற்கு மதம், இனம் எதுவும் தெரியாது. எமக்கு வாக்களித்தவர்களும், எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்களும் என சகலருக்கும் கொரோனா வைரஸ் பரவுகின்றது.

எனவே சகல மக்களையும் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீட்க சகலரும் இணைந்து கடமையாற்றுவோம். எங்காவது எம்மால் தவறுகள் விடப்பட்டால் அதனை சுட்டிக்காட்டுங்கள், நாம் அதனை திருத்திக்கொள்கிறோம். ஆனால் அரசாங்கத்தை விமர்சிப்பதாக நினைத்து நாட்டினை நெருக்கடியில் தள்ளிவிட வேண்டாம்.

நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதில் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தெற்கிற்கு கொடுக்கும் முன்னுரிமை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. இதனை தமிழ் தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ள. வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்திகள் செய்யப்படுகின்றது, வைத்தியசாலைகள் உருவாக்கப்படுகின்றது. இந்த அபிவிருத்திகள் அவர்களின் கண்களுக்கு தெரிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :