J.f.காமிலா பேகம்-
கொழும்பிலுள்ள சில பகுதிகள் நாளை மறுநாள் முதல் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புறக்கோட்டை, மரதானை, டாம் வீதி மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பிரதேசங்கள் வரும் திங்கட்கிழமை முதல் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் கெளனி, ஜா-எல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை,பேலியகொட, கடவத்தை ஆகிய பகுதிகள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் முடக்க நிலையில் இருந்து நீக்கப்படும் என்றும் இராணுவ தளபதி கூறினார்.
0 comments :
Post a Comment