இலங்கையில் பிறந்தது எனது தவறா கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேள்வி


M.I.இர்ஷாத்-

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து இந்த படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் விஜய் சேதுபதி அறிவிப்பார் என தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில் இதுநாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.

என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராகும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

"இலங்கையில் பிறந்தது எனது தவறா, நான் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்திய அணிக்காக விளையாடி சாதனை செய்திருப்பேன் " என முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :