பெஷில் ராஜபக்‌ஷவுக்கு எம்.பியாக பதவியேற்க முடியாது? கிளம்பியது புதுசர்ச்சை!

J.f.காமிலா பேகம்-

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரான பதவிப்பிரமாணம் செய்துகொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் காணொளியொன்றை இன்று பதிவிட்டு இதனைக் கூறியுள்ளார்.

‘பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பொதுஜன முன்னணி கையளித்த தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்பட்டியலில், பஸில் ராஜபக்சவின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. 

ஆகவே அவர் தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க சட்டம் அனுமதியளிக்காது’ என்றும் நாகானந்த கொடிதுவக்கு சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :