கொவிட் – 19 வைரஸ் காரணமாக தொடர் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ள வாழைச்சேனை பொலிஸ் பிரிவு மக்களுக்கு உலருணவு விநியோகம் இடம்பெற்று வருகின்றன.
இதன் தொடரில், கட்டார் நாட்டில் தொழில் புரியும் கல்குடா தொகுதியைச் சேர்ந்த நபர்கள் கல்குடா நலன்புரி ஒன்றியம் – கட்டார் எனும் அமைப்பை உருவாக்கி அதனூடாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று (10) ம் திகதி உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
முதல் கட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட உலருணவுப் பொதிகளை பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கியுள்ளதாக குறித்த அமைப்பில் ஆலோசகர்களாக செயற்படும் ஆசிரியர்களான மெளலவி ஏ.எல்.நளீம் சலாமி, எம்.எம்.நவாஸ் ஆகியோர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment