இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலிய நாடுகளோடு கூட்டுச் சேர்ந்து செயற்பட்டுவரும் இந்தியா, அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே சீனாவுடன் மோதலுக்குத் தயாரகி வருகிறது.
இந்திய சீன இராணுவ உயர்மட்டப் பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்திய இராணுவத் தளபதி பிபின் நவாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய சீன இராணு உயர்மட்டக் கலந்துரையாடல் முடிவுகள் எதுவுமேயின்றி தோல்வியடைந்துள்ளன. ஒன்பது மணி நேரம் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் முன்னேற்றம் இல்லையென ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லையோரமான லடாக் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டுமென இந்திய இராணுவம் கோரியிருந்தது. ஆனால் அதற்கு சீன இராணுவம் மறுத்துள்ளது.
லடாக் பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கி இந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இருந்ததுபோன்ற நிலையை தோற்றுவித்தால் மாத்திரமே எல்லைப் பகுதியில் பரஸ்பர நம்பிக்கையும் அமையும் ஏற்படுமென இந்திய இராணுவம் சுட்டிக்காட்டியது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்த பேச்சுக்கள் நேற்று சனிக்கிழமை காலை வரை நடைபெற்றது.
ஆனாலும் இந்திய இராணுவத்தின் கோரிக்கைகளை சீன இராணுவம் ஏற்கவில்லை. முற்றாகவே மறுத்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலந்துரையாடல்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தைக் கட்டுப்பாபட்டில் கொண்டுவர இந்திய சீன இராணுவ உயர் அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனாலும் இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால் சீனாவுடன் மிகப் பெரியதொரு போர் வெடிக்குமென இந்திய இராணுவத் தளபதி பிபின் நவாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்திய இராணுவத்தின் பதில் தாக்குல்களினால் சீன இராணுவம் லடாக் பகுதியில் இருந்து சற்றுப் பின்வாங்கியுள்ளதாகவும் பதற்றம் நீடித்தால், இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தும் எனவும் பிபின் நவாத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாகவும் கடனுதவிகள் செய்வதன் மூலமும் இலங்கையில் மிகவும் ஆழமாகக் கால்பதித்துள்ள சீனா, இந்து சமூத்திரப் பிராந்திய நாடாகவும் தன்னை செயற்கையான முறையில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்தவொரு நிலையில் இலங்கை அரசாங்கத்தை எவ்வாறு தங்கள் பக்கம் வைத்திருப்பது என்பது தொடர்பாக அமெரிக்காவும் இந்தியாவும் ஆலோசித்து வருகின்றன.
2009ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் சாட்சியங்கள் இன்றி இல்லாதொழிக்கப்பட்ட நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் பூகோள அரசியல் செயற்பாடுகளில் அதுவும் இந்தோ- பசுபிப் பிராந்திய அரசியல் நகர்வுகளில் அமெரிக்க இந்திய அரசுகளுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்திய எல்லையில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ள ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கான காரணங்களில் அதுவும் ஒன்றென இந்திய விமர்சகர்களே சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
0 comments :
Post a Comment