வத்தளை தமிழ் குடும்பம் மீதான தாக்குதல் செய்தி தொடர்பில் மனோ எம்பி நடவடிக்கை

த்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த குடும்பத்து தமிழ் பெண்ணை தாக்கியுள்ள நபர்களை கைது செய்யுங்கள்.

வத்தளை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் குடும்பத்தவர்கள், கடந்த மாதம் 4ம், 13ம் மற்றும் இம்மாதம் 7ம் திகதிகளில், யோஹான் விக்ரமசிங்க என்ற பொதுஜன பெரமுன (SLPP) என்ற ஆளும் கட்சி வத்தளை பிரதேச சபை உறுப்பினருக்கும், அவரை சார்ந்த நபர்களுக்கும் எதிராக தந்த புகார்கள் தொடர்பில், வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செலோகம ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் கண்டறியுங்கள்,

இதுபற்றிய செய்தி நேற்றைய சக்தி தொலைக்காட்சி செய்தியறிகையில் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி எமது கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் உட்பட ஆதரவாளர்கள் மற்றும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் தன்னிடம் நேரடியாக புகார் செய்துள்ளதாக, தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி, இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தை அடுத்து, சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் சமல் ராஜபக்சவிடம், நேரடியாக எடுத்து கூறி கேட்டார்.

ஆளும் கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும், இந்த பிரதேச சபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சமல் ராஜபக்ச, எம்பி மனோ கணேசனிடம் உறுதியளித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இதையடுத்து, மனோ கணேசன் எம்பி, வத்தளைக்கு பொறுப்பான மேல்மாகாண வடக்கு பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ தொடர்பு கொண்டு, இவ்விடயம் பற்றி பிரஸ்தாபித்து, வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் அசமந்த போக்கு மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடு பற்றி கவனிக்கும்படியும், வத்தளை கெரவலபிடிய பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி, அவர்களது காணி, வீடுகளை அபகரிக்கும் திட்டமா இது என விசாரிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

இதுபற்றி உடன் நடவடிக்கை எடுப்பதாக, பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ, மனோ கணேசன் எம்பியிடம் உறுதியளித்தார்.

சற்று முன், வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரி செலொகமவை தொடர்பு கொண்ட மனோ எம்பி, இத்தகைய புகார்கள் உம்மீது வத்தளை வாழ் தமிழ் மக்கள் கூறாத வண்ணம் நடந்துக்கொள்ளும் என கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :