உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கடந்த 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வாக்களித்த வாக்குகளை எண்ணும் பணி 4 நாட்களாக நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஜோ பைடனுக்கும் இடையே இழுபறியே நீடித்து வந்தது.
எனினும் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த ஜோ பைடன் 279 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ம் திகதி அமெரிக்காவில் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை டொனால்ட் ட்ரம்பே ஜனாதிபதியாக இருப்பார். ஜனவரி 20ம் திகதி அவர் தனது அதிகாரங்களை ஜோ பைடனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்தும் பிடிவாதமாகவுள்ளார். ஜனாதிபதி தேர்தல் இன்னும் முடியவில்லையென்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது சட்டப் போராட்டம் தொடரும் என அவர் கூறிவருகிறார்.
அதாவது ஜோர்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாகவும் அவ் மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அந்தந்த மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்பின் பிரசாரக் குழு சார்பாக தனித்தனியாக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இதனிடையே அதிகார மாற்றத்தை முன் நின்று நடத்த வேண்டிய GSA ( General Services Administration ) எனப்படும் அரச துறையில் ட்ரம்ப் நியமித்தவர்களே இருப்பதால், வெற்றியாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வெள்ளை மாளிகையில் உத்தியோகத்தர்களை நியமித்தல், அதிகார மாற்றத்திற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் ஜோ பைடன் தரப்புக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, ஜனநாயக ரீதியில் அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்திக்கொடுக்க ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
டொனால்ட் ட்ரம்பின் குடும்பத்திலும் சிலர் இதனை வலியுறுத்தியுள்ளனர். அவரது மனைவி மெலனியா மற்றும் மருமகன் ஜெரட் குஷ்னர் ஆகியோர் தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியான முறையில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற ட்ரம்பை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேசமயம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ட்ரம்பின் நண்பர்களில் சில முக்கிய நபர்கள் அவரது நிலைப்பாடு மிகவும் சரியானது என்றும் அவர் தனது சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாகவும் உள்ளார். இந் நிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து முக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரசாரங்களைப் போல் பிரமாண்ட பேரணிகளை நடத்த டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தான் கூறும் மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கையை வலியுறுத்தி அவர் இந்த பேரணிகளை நடத்தவுள்ளார்.

0 comments :
Post a Comment