காரைதீவு நிருபர் சகா-
எமது கூட்டமைப்பின் வசமுள்ள அனைத்து உள்ளுராட்சிசபைகளையும் மீண்டும் தம்வசப்படுத்த தமிழ்உறுப்பினர்கள் ஒன்றிணையவேண்டியது காலத்தின்கட்டாயமாகும்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
காரைதீவிலுள்ள த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்து காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலை சந்தித்துக்கலந்துரையாடுகையில் தெரிவித்தார்.
கூடவே மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் த.தே.கூ. உறுப்பினர்களான த.மோகனதாஸ் சி.ஜெயராணி ஆகியோரும் கட்சியின் இளைஞரணிஉபசெயலாளர் அருள்.நிதான்சன் சமுகமளித்திருந்தனர்.
அங்கு கலையரசன் எம்.பி மேலும் கூறுகையில்:
நீண்டகாலமாக அடக்குமுறையிலிருந்த தமிழ்மக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயனபடுத்திக்கொள்ளவேண்டும். எமது கட்சியினர்மாத்திரமல்லாமல் தமிழ்உறுப்பினர்கள் கட்சிபேதமற்று இணையவேண்டியது அவசியமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு திருக்கோவில் பிரதேசசபைகள் எமது கட்சியின் ஆதிக்கத்திலுள்ளன.அவை நிச்சயம் 2021ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதன்சூலம் எம்வசமாகும். அதற்கான ஆதரவுகளை சக்திமிக்க தவிசாளர்கள் முன்னெடுத்துள்னர்.
காரைதீவில் பிறந்த ஒவ்வொரு தமிழ் உறுப்பினரும் இச்சபையைக்காப்பாற்ற ஒன்றிணைந்து வரவுசெலவுத்திட்ததிற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும.
கடந்தகாலங்களில் காரைதீவு மண் கட்டிக்காப்பாற்றி வந்த ஒற்றுமையை மீண்டும் நிருபிக்கவேண்டியுள்ளது. அதைக்கட்டிக்காக்கவேண்டிய பொறுப்பு தவிசாளர் உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல பிரதேசமக்களையும் அமைப்புகளையும் சார்ந்தது.
காரைதீவு பிரதேசபையை தமிழ்மகன் ஒருவர்தான் தவிசாளராக ஆளவேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.
த.தே.கூ.உறுப்பினர்கள் அனைவரும் த.தே.கூ.சபையில் ஒன்றாகவே வாக்களிக்கவேண்டும். அதற்கான கட்டளையை கூட்டமைப்பின் செயலாளர் ப.சத்தியலிங்கம் கடிதங்கள் மூலம் விடுத்துள்ளார்.
நாம் இழந்த சபைகளையும் மீளப்பெறவேண்டிய வேலைத்திட்டங்களையும்முன்னெடுத்துவருகிறோம்.
உள்ளுராட்சிசபை முக்கிய ஸ்தானமாகும். அதில் மிகவும்கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
துரதிஸ்டவசமாக அதன்தேர்தல்முறைமை அறுதிப்பெரும்பான்மையில்லாது ஏனையகட்சிகள்மீது தங்கியிருக்கவேண்டிய கட்டாயமுள்ளது.எனவே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவது என்பது பாரிய சவாலாகும்.
அதன்காரணமாகவே வரவுசெலவுத்திட்ட நிறைவேற்றம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இங்குள்ள தவிசாளர்; சாணக்கியமுள்ளவர். அவர் தமது உறுபபினர்களின் ஆதரவை ஏலவேபெற்றுள்ளஅதேவேளை ஏனையகட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். எனவே திட்டம் நிறைவேறும் என்பதில் முழுநம்பிக்கையுள்ளது. என்றார்.
தவிசாளர் கே.ஜெயசிறில் கருத்துரைக்கையில்:
வடக்கு கிழக்கில் த.தே.கூட்டமைப்பு முதலாவதாக
ஆட்சிபீடமேறிய சபை காரைதீவு பிரதேசசபையாகத்தான் இருந்தது.இறையாசியோடு திருவுளசீட்டின்மூலம் நான் தவிசாளரானேன்.
பிரதேசசபைத்தேர்தல் வித்தியாசமானது. காரைதீவில் 4சபைகளிலும் த.தே.கூட்டமைப்பே வெற்றிபெற்றது. ஆனால் தேர்தல் அமைப்புமுறையில் சிலகுறைந்த வாக்குகளைப்பெற்றவர்களும் போனசில் உறுப்பினராகியுள்ளனர்.
அரசோடு அற்பசொற்ப சலுகைகளுக்காக ஒட்டியிருக்கின்ற சில அடிவருடிகள் த.தே.கூட்டமைப்பின் ஆட்சியிலிருக்கும் சபைகளை குழப்பியடிக்க சதித்திட்டம் போட்டுவருகின்றனர். அத்தகைய உறுப்பினர்களுக்கு சில சலுகைகளை தருவதாகக்கூறி வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடித்து தவிசாளர்களை மாற்றமுயற்சிக்கின்றனர்.
அதனைத்தோற்கடிக்க எமது கட்சியின்பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. மற்றும் எம்பிக்களான சாணக்கியன் கலையரசன் போன்றோர் கட்சிப்பணிகளில் ஈடுபடுவதனையிட்டுவாழ்த்துகிறேன்.
எமது சாணக்கியன் எம்.பி எமது அம்பாறை மாவட்டதமிழ்ப்பிரதேசங்களையும் கவனிக்கவேண்டும் என்றார்.

0 comments :
Post a Comment