வாழைச்சேனையில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவிக்கு பரீட்சை எழுத விசேட ஏற்பாடு

எச்.எம்.எம்.பர்ஸான்-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான க.பொ.த. உயர்தர மாணவிஇ பரீட்சை எழுத இன்று (3) விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி வரும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மாணவியொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, ஒக்டோபர் 29ஆம் திகதி கண்டறியப்பட்டது.

ஓட்டமாவடியில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை எழுதி வந்த நிலையிலே, அம்மாணவிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பரீட்சையை, மாணவி சிகிச்சை பெற்று வரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்து எழுத பரீட்சை திணைக்களத்தால் விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இதேவேளை, மேற்படி, மாணவியுடன் முன்னதாக பரீட்சை எழுதிய ஏனைய மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :