அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு நான் தயார் - முஷாரப் எம்.பி

இர்ஷத் ஜமால்-

பிரதான எதிர் கட்சியினர் 20 ஆவது சீர்திருத்தத்தை எதிர்த்தனர் என்பதற்காக, 20 இன் 57 உபபிரிவுகளையும் எதிர்த்தனர் என்று அர்த்தம் கொள்ள முடியாது. 57 இல் சில பிரிவுகளுக்கு மௌனம் காத்து தமது சம்மதத்தை தெரிவித்திருந்தனர். அவர்களைப் போன்று அல்லாது 20ஐ எதிர்த்த நான் வெளிப்படடையாகவே இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன்.

அதே போன்று அரசால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கி இருந்தேன். ஒரு மேம்போக்கான அரசியல் முறைமைகளுக்குள் அகப்பட நான் விரும்பவில்லை. அதனாலேயே குறித்த இரு சந்தர்ப்பகளிலும் எனது ஆதரவு இருந்தது. என் முடிவுகள் எப்போதும் கட்சிக்கும், தலைமைக்கும் மற்றும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் மாத்திரமே அமைந்திருக்கும். இம்மூன்று விடயங்களுக்கும் முரண்பாடாக நான் இருப்பேனேயானால், அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயாராகவே உள்ளேன்.

 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.

எமது தலைவர், அமைச்சர் விமல் வீரவன்சவை போன்று இரு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்தற்காவோ அல்லது 45 அரச வாகனங்களை முறைகேடாக துஸ்பிரயோகம் செய்ததற்காவோ கைது செய்யப்படவில்லை. 
மாறாக இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வந்த மக்களுக்கு வாழ்விடம் வழங்கியதற்காகவும், அம்மக்களின் ஜனநாயக உரிமையை நிறைவேற்ற பிரயாண ஒழுங்குகளை செய்து கொடுத்ததற்காகவுமே அவர் கைது செய்ப்பட்டுள்ளார். எனவே எவ்வித குற்றமும் செய்யாத எமது தலைவர் விடுதலை பெற்று வருவார் என்று தெரிவித்துள்ளார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :