மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு கிடைத்து இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம் - ஏ.ஜே .எம். முஸம்மில்


க.கிஷாந்தன்-

பி
ரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வொன்று நடைபெற்றது.

இந்த போது உரையாற்றிய ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில்:

'மகிந்த ராஜபக்ச இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர், அனைத்து மதங்களையும் மதிப்பவர், அவர் போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு கிடைத்து இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம், மென்மேலும் இந்த நாட்டுக்காக சேவை செய்ய அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்திப்போம்' எனத் தெரிவித்தார்.

சர்வமத நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த சமய நிகழ்வில் பதுளை முதியங்கான ரஜமகா விகாரைக்கு பொறுப்பான மலகல சந்திம தேரர், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் இந்து மதத் தலைவர்கள், ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் வீரசிக, பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிரி, ஊவா மாகாண பிரதான செயலாளர் P.டீ. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :