கல்முனையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..



சர்ஜுன் லாபீர்-

ல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று(17) பராமரிப்பற்ற வெற்று காணிகள் மற்றும் பூட்டப்பட்டு கிடைக்கின்ற இடங்களை குறிவைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்முனை சுகாதார பிரிவினரும் கல்முனை பொலிஸ் நிலையமும் இணைந்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னியின் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனேகமான வெற்றிக்காணி சொந்தக்காரர்களுக்கு முன்னெச்சரிக்கையும் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வருகின்ற மாரி காலம் என்பதால் இனிவரும் காலங்களிலும் தீவிரமான டெங்கு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தத்தமது இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் சுத்தமாக வைத்திருப்பது தங்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாயக் கடமையாகும்.

மீறுவோருக்கு எதிராக பக்க சார்பின்றி உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ ரிஸ்னி தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :