M.I.இர்ஷாத்-
அமெரிக்காவின் விருப்பங்களை இலங்கை மீது திணிப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.
இணையவழி ஊடாக இடம்பெற்று வருகிற இம் மாநாட்டின் இறுதி அமர்வு இன்றாகும்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்க தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த அமெரிக்க செயலர் மைக் பொம்பியோ கொழும்பில் வைத்து தன்னிடம் பேசியபோது இதனைக் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடுகள் இடையே கூட்டமைப்பை உருவாக்குவதை விடுத்து அந்நாடுகளில் கொள்கை, எதிர்பார்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment