வி.ரி.சகாதேவராஜா-
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம் மூன்றாம்தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பமாகியது.
மாணவர்கள் கைகழுவி முகக்கசவசமணிந்து சமுகஇடைவெளியைப்பேணி பாடசாலைக்குள் பிரவேசித்தனர்.
அதிபர் சீ.பாலசிங்கன் ஆசிரியர் மாணவர்களுக்கான சுகாதாரநடைமுறை விதிகள் பற்றியும் பாடசாலை ஒழுங்கு நடைமுறை பற்றியும் காலையில் விளக்கமளித்தார்.
பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்திருந்தனர்.
ஆசிரியர் மாணவர் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு ஏனைய சுகாதாரவிதிமுறைக்கிணங்க உள்ளீர்க்கப்பட்டனர்.
சமுகஇடைவெளியைப்பேணி காலை ஆராதனை இடம்பெற்றது. பின்னர் அதேபோன்று வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டு கற்றல்கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment