பாடசாலை மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களை சுகாதாரப் பிரிவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று (23) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பொதுச் சுகாதாப் பரிசோதகர்கள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து சுகாதார அறிவுறுத்தல்களை வழங்கினர்.
அந்தவகையில், இன்றையதினம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.நெளசாத் விஜயம் செய்து ஆசிரியர்களும், மாணவர்களும் கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெற்றுக் கொள்வது என்பன பற்றி விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை நடாத்தினார்.
பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
0 comments :
Post a Comment