அமைச்சரவையில் சரத் வீரசேகரவிற்கு அமைச்சுப்பதவி- முஸ்லீம் தரப்பில் எவருக்குமில்லை-

J.f.காமிலா பேகம்-

கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற தற்போதைய இராஜாங்க அமைச்சரான அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கி அழகுபார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இவரது நியமனத்தின் பின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கையான 30 பேரில் இரண்டே வெற்றிடங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இராஜாங்க அமைச்சராக இருந்துவரும் சரத் வீரசேகர அமைச்சராகிய பின்னர் ஏற்படுகின்ற அவரது இராஜாங்க அமைச்சுப் பதவி வெற்றிடத்திற்கு, 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பி டயனா கமகேவுக்கு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 20ஐ ஆதரித்து வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எதுவித பதவிகளும் வழங்கப்படாது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

சில வேளைகளில் வரவு செலவுத் திட்டத்தின் பின் பதவிகளில் மாற்றங்களைக் கொண்டுவர ஜனாதிபதி விரும்பினால் இவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படலாம் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :