ஜனாஸா எரிப்பை ஜனாதிபதி தடுக்க வேண்டும் : முஷாரப் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்



இர்ஷாத் ஜமால்-

கொரோனா தொற்றானது நாட்டில் வீரியம் அடைந்து செல்கின்றது. இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படலாம் என்ற அச்ச நிலை உருவாக்கி உள்ளது.
அவ்வாறு மரணங்கள் நிகழுமாயின், அது முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரும் துயர் நிலையை ஏற்படுத்தும்.
மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்யும் உரிமை இலங்கையில் மாத்திரம் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா காரணமாக மரணித்த முஸ்லிம்களது ஜனாசாக்களை தகனம் செய்வதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். நாம் எமது ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையினை ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என அ.இ.ம. காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கடிதத்தில், கோரோனா வைரசினால் மரணிக்கும் முஸ்லீம்களின் இருதிக் கிரிகையினை இஸ்லாமிய முறைப்படி நிறைவேற்றும் சந்தர்ப்பம் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. மரணித்த முஸ்லிம்களை ஏறிப்பதனால் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் வரு கின்றனர்.

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள 20ஆவது திருத்தின் பின்னர் உங்களிடம் நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கோரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை WHO வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதனால் முஸ்லிம் மக்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் எங்களுடைய மத உரிமையும் எங்களுக்கு கிடைக்கும் . மேற்கூறிய விடயங்களையும், இலங்கை வாழ் முஸ்லிம்களின் உணர்வுகளையும் கவனத்தில் கொண்டு இதற்கு ஒரு தீர்வை பெற்றுத்தருமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன், எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :