அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் காடுகளை அழித்து வீடுகள் அமைத்தார் என்ற குற்றச்சாட்டில் மேற்கொள்ளப்பட்ட வழக்குக்காக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
குறித்த தீர்ப்பில் தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த வனப்பகுதியில் காடழிப்பு மேற்கொண்டமை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment