இலங்கையில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கிலங்கள்-இயற்கையின் எச்சரிக்கையா?

J.f.காமிலா பேகம்-

கொழும்பை அண்மித்த நகராகிய பாணந்துறை கடற்கரைப் பகுதியில் திரளான திமிங்கிலங்கள் கரையொதுங்கியிருப்பதால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது என பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார், இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் திமிங்கிலங்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 25 அடி நீளமுடையவை.

இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் திமிங்கலங்களை பார்வையிட மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர்.

எனினும் திமிங்கிலங்கள் இவ்வாறு உயிருடன் கரையொதுங்கியிருப்பது இயற்கை அனர்த்தத்திற்கான எச்சரிக்கையா என்று அப்பிரதேச மக்களிடையே சந்தேக அலை ஏற்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :