ஹஸ்பர் ஏ ஹலீம்-
தம்பலகாமம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட விசேட அமர்வு இன்று (25) பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
எதிராக 09 வாக்குகளும்,ஆதரவாக 05 வாக்குகளும்,நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டு குறித்த விசேட சபை தோற்கடிக்கப்பட்டது சபையில் தவிசாளர் உட்பட மொத்தமாக 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்கள்.
இதில் மக்கள் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் எச்.தாலிப் அலி, உபதவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார (ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன) ,எஸ்.எம்.சுபியான் (ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி), ஆர்.எம்.குடா பண்டா(பொதுஜனபெரமுன), வி.விஜயகுமார்(தமிழ் தேசிய கூட்டமைப்பு), எம்.ஐ.றிகாஸ் அஹமட்(ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)
கே.பாலச் சந்திரன்( தமிழ் தேசிய கூட்டமைப்பு), எம்.எஸ்.ரசீன்கான்( ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி), வி.எம்.வி.குணரட்ண ( பொதுஜனபெரமுன), எம்.வை.இமாம்தீன்(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), ஏ.எச்.ஏ.றஹீம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), ஆர்.எம்.றஜீன் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்), ஏ.ஏ.அஸ்வர் (ஐக்கிய மக்கள் சக்தி), ஆர்.பிரகலாதன்(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்),
எஸ்.பரீதா உம்மா( ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), ஏ.எச்.டி.அலீம்( ஐக்கிய மக்கள் சக்தி) இதில் நடுநிலையாக உறுப்பினர்களான ஏ.எச்.ஏ.ரஹீம், ஏ.ஏ.அஸ்வர் போன்றோர்களும் ஆதரவாக உறுப்பினர்களான ஆர்.எம்.றஜீன், ஏ.எச்.டீ.அலீம்,எச்.தாலிப் அலி, கே.பாலச்சந்திரன்,வி விஜயகுமார் எதிராக வாக்களித்த உறுப்பினர்களாக ஏ.ஜீ.சம்பிக்க பண்டார, எஸ்.எம்.சுபியான்,
எம்.ஐ.றிகாஸ் அகமட், எம்.எஸ்.ரசீன்கான், வி.எம்.வி.குணரட்ண, எம்.வை.இமாம்தீன், ஆர்.பிரகலாதன், எஸ்.பரீதா உம்மா, ஆர்.எம்.குடாபண்டா போன்ற மாதிரியான வாக்களிப்பு இடம் பெற்று வருடாந்த பாதீடு தோற்கடிக்கப்பட்டது..
0 comments :
Post a Comment