காணி வேண்டுமா ? அரசியல்வாதிகளுக்கு ஆராத்தியெடுப்பதை விடுத்து இதனை வாசியுங்கள்.

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது-

பா
வனையில் இல்லாத அரச காணிகளை, மத்தியதர வகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணிகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன், காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் காணி வழங்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

இதற்காக நீங்கள் இங்கே உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உங்களது பிரதேச செயலகத்தில் சமர்ப்பியுங்கள். இதன் விண்ணப்ப இறுதித் திகதி நவம்பர் 15 ஆகும்.

நீங்கள் அரச/தனியார் ஊழியராக இருந்தாலோ, அல்லது ஏற்கனவே காணிக்கு சொந்தக்காரராக இருந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே உற்பத்தித் துறையில் ஈடுபடுபவராக இருந்தாலோ இதனை விண்ணப்பிப்பதற்கு தடையல்ல.

“நீங்கள் எந்த பிரதேசத்தில் காணியொன்றினை எதிர்பார்க்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு அரச காணியில்லாத சொந்த ஊரை குறிப்பிட வேண்டாம். அவ்வாறு விண்ணப்பிக்கின்றபோது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும்.

பயன்பாடற்ற அரச/ மத்திஸ்யதர வகுப்பு (MC land) காணிகள் அதிகம் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றை குறிப்பிடுங்கள்.

இது வடமாகாணத்தை சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக பெற்றுக்கொண்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :