பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுறா மீன்கள்- இந்தியாதான் காரணம்..!

MI.இர்ஷாத்-

கொழும்பு – பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடற்பகுதியில் பலம்வாய்ந்த நாடுகளின் கடற்படைகளால் நடத்தப்பட்ட போர் பயிற்சியே இதற்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த கடற்படை பயிற்சிகளில் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டாரவிடம் சிங்கள ஊடகம் ஒன்று வினவியபோது, அந்த பயிற்சியில் இலங்கை கடற்படையினர் தொடர்புபடவில்லை என்று கூறியுள்ளார்.

இலங்கை கடற்பகுதியில் அந்தப் பயிற்சிகள் இடம்பெறவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அப்படியொரு பயிற்சி இடம்பெற்றது என்பதை உறுதி செய்தார்.

இதேவேளை, பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுறா மீன்களில் 10 மீன்கள் வரை உயிரிழந்ததோடு ஏனைய மீன்கள் பொதுமக்கள் மற்றும் கடற்படை உதவியுடன் மீண்டும் கடலுக்கு தள்ளிவிடப்பட்டன.

இதில் உதவிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :