தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து வெளியேரியோர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வெளிப்பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்ற பஸ் ஓட்டமாவடி பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது ஓட்டமாவடியில் இருந்து வெளிப்பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலைக்கு 32 தொழிலாளர்களை பஸ்சில் ஏற்றிச் செல்வதாக சுகாதார தரப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து அதில் பயணம் செய்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் நடைபெற்ற பரிசோதனையில் போது சுகாதார பரிசோதகர்கள் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :