அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் முடிந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்ததாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் வோஷிங்டனில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். பேரணி அமைதியாக நடந்து கொண்டு இருந்தது. டிரம்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். வெள்ளை மாளிகை அருகே மாலையில் பேரணி கடந்தபோது அந்த பகுதியில் இனவெறிக்கு எதிராக சிலர் பேரணி நடத்தினர். அவர்களுக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
டிரம்ப் ஆதரவாளர்கள் ஏந்தி வந்த பதாகைகள் அணிந்திருந்த தொப்பி உள்ளிட்டவற்றை எதிர் கோஷ்டினர் பறித்து தீவைத்து எரித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அது வன்முறையாக மாறியது.
தடி உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கினர். பொலிசார் உடனடியாக விரைந்து மோதலை தடுத்தனர்.
இந்த வன்முறையில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் ஒருவருக்கு முதுகில் கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தவிர சில பொலிசாரும் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது.
இந்த தாக்குதலுக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment