கொழும்பை வட்டமிடும் ஹெலிகொப்டர்கள்-அச்சத்தில் மக்கள் -

J.f.காமிலா பேகம்-

கொழும்பு 15 மற்றும் பொரளை, தெமட்கொடை அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக ஹொலிகொப்டர்கள் பயணிப்பதை அடுத்து, பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பல ஹொலிகொப்டர்கள் மிகவும் கீழாக தொடர்ந்தும் பயணித்து வருவதை காண முடிகின்றது. 

ஏன் ஹொலிகொப்டர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக பயணிக்கின்றன என்பது குறித்து விமானப்படை ஊடகப் பிரிவை தொடர்புக் கொண்டு வினவியபோது,

தனிமைப்படுத்தல் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, அது தொடர்பில் ஆராய்வதற்காகவே ஹொலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஏதேனும், சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அது தொடர்பில் உரிய தரப்பிற்கு அறிவிக்க விமானப்படை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஹொலிகொப்டர்களுக்கு மேலதிகமாக, விமானப்படைக்கு சொந்தமான மூன்று ட்ரோன் குழுக்களும் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஹொலிகொப்டர்கள் கீழ் வானில் பறப்பதை எண்ணி, மக்கள் அச்சப்பட தேவையில்லை என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :