காரைதீவு நிருபர் சகா-
காரைதீவின் தென்புல எல்லையில் தடைபட்டிருந்த வரவேற்பு வளையி அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் மீண்டும் நேற்றுமுன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த மனோகணேசனை அணுகி இதற்கான நிதியைப் பெற்றிருந்தார்.
காரைதீவு – நிந்தவூர் எல்லையில் அமையவுள்ள இவ்வரவேற்பு வளையியை அமைப்பது தொடர்பில் காரைதீவிலுள்ள துறைசார்ந்த தொழினுட்பநிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளை அழைத்துக்கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் வீதிஅபிவிருத்திஅதிகாரசபை நீர்ப்பாசனத்திணைக்களம் வளையியின் ஒரு பக்கதூண்கள் அமையும் காணிஉரிமையாளர்கள் போன்றோரின் அனுமதியையும் பெற்றிருந்தார்.
இவ்வரவேற்புவளையியிக்கான அடிக்கல்நடும் விழா 2018இல் நடைபெற்றபோதும் சிலஅதிகாரிகளின் பொறுப்பற்றபோக்கினால் கட்டுமானப்பணி தாமதமடைந்துவந்தது. அதாவது கிடப்பில் கிடந்தது.
தற்போது மீண்டும் இவ்வளையியியை அமைப்பதற்கான கால்கோள் இடும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஒப்பந்தக்காரரிடம் கட்டுமானப்பத்திரத்தை வழங்கினர்.
அந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வெகுவிரைவில் இதன்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு குறுகியகாலத்துள் பூர்த்தியாக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment