இலங்கையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் கேள்வி



பைஷல் இஸ்மாயில் -
மெரிக்காவில் பெண் உப ஜனாதிபதி தெரிவானதற்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் இலங்கையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகத்துக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தேசிய அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் 5.5% வீதமாக உள்ளது.
இலங்கை அரசியலில் பெண்களுக்கான சந்தர்ப்பம் மற்றும் வாய்ப்புக்கள் சரியான முறையயில் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இதுவரை ஜனநாயக ரீதியான 74 தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த தேர்தல்களின்போது ஆணாதிக்கம் மிக அதிகமான சந்தர்ப்பங்களில் காணப்பட்டன. வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போதும் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களின் தீர்மாணம் எடுக்கும் சாரார் பெண்களை விட ஆண்களுக்கே சந்தர்ப்பத்தை அதிகமாக வழங்கியுள்ளார்கள்.
இவற்றை பார்க்கும் போது மிகத் தெளிவாக விளங்கும் ஒரு விடயம் என்னவென்றால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் மேடைகளிலும் அரசியல் விவாதங்களிலும் மாத்திரம் தான் ஜனநாயகத்தை பற்றிப் பேசுகின்றார்கள் ஆனால் கட்சிகளுக்குள்ளே உள்ளக ஜனநாயகத்தை பின்பற்ற தவறி விடுகின்றனர்.
ஜனநாயகத்தின் பிரதான கோட்பாடுகளிள் ஒன்றான பால்நிலை சமத்துவத்தை பின்பற்ற மறுக்கின்றார்கள். இதனால் இலங்கையில் 52 சத வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களாக பெண்கள் இருந்தும் பாரளுமன்றத்தில் பெண்பிரதி நிதித்துவம் 6 சத வீதத்தைத் தாண்டாமல்
இருக்கின்றது.
இருதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமாக 7458 வேட்பாளர்கள் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களில் இருந்து போட்டியிட்டார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இதில் 819 பெண் வேட்பாளர்கள் மாத்திரம்தான் பெண் பிரதிநிதிகளாக போட்டியிட்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக 35 இற்கும் குறைவான வேட்பாளர்கள் மாத்திரம்தான் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிள் ஈடுபட்டு தேர்தலில் வெற்றிபெர வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள்.
ஏனையவர்களை கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் பெயரளவில் பெண்களுக்கு தாமும் சந்தர்ப்பத்தை வழங்கினோம் என்பதை கான்பிப்பதற்காக பெண்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலில் இனைத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மிக நீண்டகால போராட்டத்தின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களிள் 25 சதவீதமான பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்தில் பெண் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :