நூருல் ஹுதா உமர்-
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சுகுணனின் வழிகாட்டலுடன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரிஸ்னி முத்துவின் தலைமையில், கல்முனை பொலிஸாரும் இணைந்து இன்று கல்முனை பிரதான வீதி, மற்றும் உள்ளக வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வீதியால் சென்ற பாதசாரிகள், உணவகங்கள், வாகனங்கள், அரச மற்றும் தனியார் பேருந்துகள் ,கடற்கரை, விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் முகக்கவசம் அணியாது, சமூக இடைவெளியை பேணாது சுகாதார நடவடிக்கைளை பின்பற்றாத பலருக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

0 comments :
Post a Comment