கைதிகளுக்கு கொரோனா- போகம்பர சிறை கூரையில் ஆர்ப்பாட்டம்


M.I.இர்ஷாத்-

ழைய போகம்பர சிறைச்சாலையிலுள்ள சில கைதிகள் கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

கைதிகளை தனிமைப்படுத்துவதற்காக பழைய போகம்பர சிறைச்சாலை ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் சுமார் 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 30 கைதிகளுக்கும், சில அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், தமக்கும் கொவிட் தொற்று ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகள் தெரிவிக்கின்றனர்.

அதனால் தமக்கு உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனையை நடத்தி, வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்கு தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :