மிருகத்திற்கு பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்சாரத்தினால் நான்கு பிள்ளைகளின் தாய் பலி.


க.கிஷாந்தன்-

க்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின்சாரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமான முறையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் 12.11.2020 இடம்பெற்றுள்ளது.

இதில் உயிழந்தவர் காளி கிட்னம்மாள் 65 வயது நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தாய் பூஜைக்காக வாழையிலை வெட்டுவதற்காக குறித்த தோட்டத்திற்கு சென்றுள்ளார் நீண்ட நேரம் வராததால் வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது குறித்த தாய் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

அதனை தொடந்து பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.

குறித்த தாயின் சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :