M.I.இர்ஷாத்-
பகிரங்க ஊடக சந்திப்பில் பச்சையாக தாம் மீனை சாப்பிட்டுக் காண்பித்த பின் மீன் விற்பனை மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் சமைக்காத பச்சை மீனுடன் அதில் பங்கேற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியும், முன்னாள் கடற்தொழில் அமைச்சருமான திலிப் வெதஆராச்சி, பச்சை மீனை சாப்பிட்டுக் காண்பித்தார்.
இதுகுறித்து இன்று ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், மீன் கொள்வனவு மற்றும் அதனை உட்கொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே தாம் அதனை செய்தாகவும், பச்சையாக மீனை சாப்பிடுங்கள் என்ற கருத்தை தாம் கூறவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
0 comments :
Post a Comment