சட்டவிரோதமான செயற்பாடுகள் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக அமைகிறது – ஏ.ஜீ.அமீர் Mps

எச்.எம்.எம்.பர்ஸான்-

பொதுமக்களின் சட்டவிரோதமாகன செயற்பாடுகள்தான் டெங்கு நோய் பரகுவதற்கு காரணமாக அமைகிறது என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் இன்று (5) வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டன. இதன்போது பொதுமக்கள் பலர் தங்களுடைய வீட்டு கழிவு நீரை மழைநீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் இட்டுள்ளனர். அத்துடன் கட்டட வேலைகளை செய்வதற்காக வடிகான்கள் மேல் கல், மண் போன்ற பொருட்களை குவித்ததன் காரணமாக அவை வடிகான்களில் அடைபட்டு தேங்கி கிடக்கின்றன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாகத்தான் டெங்கின் தாக்கம் குறித்த பகுதியில் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு கொடிய டெங்கு நோயிலிருந்து பாதுகாப்புப் பெற அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :