பிறந்தநாள் விருந்துக்கு சென்ற அட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பினர் 08 பேர் உட்பட 10 பேர் சுயதனிமையில்


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா -

பிறந்த நாள் விருந்துக்கு சென்ற எட்டு உறுப்பினர்கள் உட்பட 10 பேர் சுயனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர் ஆர் பாலகிருஸ்ணன் தெரிவிதார்

அட்டன் டிக்கோயா நகரசபையின் ஆளும் எதிரணி உறுப்பினர்கள் அடங்களாக எட்டு பேர் நகரசசபையின் செயலாளர் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவருமே 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
ஹட்டன் டிக்கோயா நகரசபையின் எதிர்கட்சி உறுப்பினரின் பிறந்ததின விருந்துபசாரத்தில் கடந்த 19 ஆம் கலந்து கொண்டவர்களே 24 /12 மாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இந்த விருந்துபசாரத்தில்
கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு 24/12/2020. தொற்று உறுதியானதையடுத்தே மேற்படி 10 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டு அன்றைய தினமே பிசி.ஆர் பரிிசோதனை செய்து அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார. பரிசோதகர் பாலகிருஸ்ணன்தெரிவித்தார்

மேலும் தொற்றாளரான அக்கரபத்தனை பிரதேசசபை தலைவருடன் தொடர்பை பேணிய அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் கடந்த 22 ஆம் திகதி முதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :