எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் பாடசாலைக்கல்வியை இடைநடுவில் கைவிட்டு மீள பாடசாலைக்கு இணைப்புச்செய்யப்பட்ட 08 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் இன்று(14) வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான கற்றல் உபகரணங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஹஸ்மி, மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சித் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment