காரைதீவு கிராமாட்சிமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் கணபதிப்பிள்ளை முருகேசு அவர்களின் 100ஆவது பிறந்தநாள் நினைவாக வறுமைப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு நீர்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
100ஆவது பிறந்தநாள் நினைவாக இவரின் பிள்ளைகளால் ஆரம்பித்துவைக்கப்பட்ட முருகேசு அறக்கட்டளை நிதியம் என்ற அமைப்பினூடாக தெரிவு செய்யப்பட்ட மூன்று வறிய குடும்பங்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நீர்தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் பிரதேச சபை வளாகத்தில் நேற்று இடம் பெற்றது.
தவிசாளர் ஜெயசிறில் மறைந்த கிராமாட்சி மன்ற உறுப்பினர் முருகேசு அவர்களின் அந்தக்கால சேவைகள் பற்றி; எடுத்துக்கூறியதோடு அவர்களின் பிள்ளைகள் சமுகத்தில் முன்னோடியாக இருப்பதையிட்டு மகிழ்வடைகின்றேன். முன்னாள் அமைச்சரின் ஊடகஇணைப்பாளரும் எமது முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான முருகேசு நடேஸ் அவர்களும் அன்னாரின் புத்திரராவார். அனைவரையும் நன்றியோடு பார்க்கிறேன்.இந்த அறக்கட்டளை நிதியம் மேலும் பலசமுகசேவைகளை செய்யுமென எதிர்பார்க்கிறேன். என்றார்.
முன்னதாக அங்கு முன்னாள் கிராமாட்சிமன்ற உறுப்பினர் என்றவகையில் அவரது 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் அன்னாரின் பிள்ளைகள் உறவினர் எனச்சிலரும் சுகாதாரமுறைப்படி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment