வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா - தொழிற்சாலைக்கு பூட்டு

நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

ட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலை தற்காளிகமாக மூடப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் பி.காமதேவன் தெரிவித்தார்

23/12/2020 நேற்று மாலை வெளியாகிய அறிக்கையில் நான்கு ஆண்கள் ஆறு பெண்களுமாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது

கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகியபோது மேற்படி பத்து பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது .

இவர்களில் நான்கு பெண்கள் வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டுள்ள 60 பேரின் குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை தற்காளிகமாக மூடப்பட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :