13 ஆயிரம் கோடி ரூபா நாணயத்தாளை புதிதாக அச்சடித்துள்ளாதால் சிம்பாவே போன்றே இலங்கை மாறும்- சம்பிக்க


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிதாக 13 ஆயிரம் கோடி ரூபாயை அச்சடித்துள்ளதாகவும், இத் திட்டமானது நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்போவதாகவும், 2020ம் ஆண்டை விடவும் 2021ம் ஆண்டு மிக மோசமான வருடமாக அமையப்போகின்றதாகவும், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன், கடன் நெருக்கடியில் நாடு மீண்டும் விழப்போகிறது என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பாரளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதியமைச்சு மற்றம் நிதி ராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில்:-
நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சி காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சகல தொழில் துறையும் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது, கடந்த 8 மாதங்களில் 3% வாகன இறக்குமதி செய்யப்பட்டுள்ளது,
அதேபோல் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இறக்குமதியை தடை செய்வதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில் உலக நாடுகள் இதற்கு எதிராக செயற்பட இப்போதே ஆரம்பித்துள்ளனர். இறக்குமதியை நிறுத்தினால் ஏற்றுமதியும் தடை செய்யப்படும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இறக்குமதியை தடை செய்வதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில் உலக நாடுகள் இதற்கு எதிராக தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளனர். இறக்குமதியை நிறுத்தினால் ஏற்றுமதியும் தடைசெய்யப்படும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது, நாட்டின் சகல அதிவேக நெடுஞ்சாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது, இப்போதே சில இடங்களில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டும் உள்ளது, இன்று நாட்டிற்கு வீதி அபிவிருத்தியா அவசியம், அரச நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு முழுமையான வருமானம் இல்லாத நிலையில் வீதிகளை அபிவிருத்தி செய்து மக்கள் பயன் பெறுவார்களா?

அரசாங்கம் வீதி அபிவிருத்தியை வைத்து அடுத்த மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. 2020ம் ஆண்டை விடவும் 2021ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப் போகின்றது, பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போகின்றது, கடன் நெருக்கடியில் நாடே விழப்போகின்றது.

 எனவே அரசாங்கம் புதிய பணத்தை அச்சடித்து நிலைமையை கையாள நினைக்கின்றது, November மாதம் தொடக்கம் அடுத்த வருடம் December வரையில் 13 ஆயிரம் கோடி ரூபாயை அச்சடித்துள்ளது. இது நவீன பொருளாதார நகர்வு என கூறினாலும் சிம்பாப்வே நாட்டிற்கு ஏற்பட்ட நிலையே ஏற்படப் போகின்றது. புதிதாக பணம் அச்சடித்ததன் விளைவையும் அடுத்த வருடத்தில் பார்க்கத்தான் போகின்றோம்.

அரச நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சி கண்டே வருகின்றது, நல்லாட்சி அரசாங்கத்தில் லாபமடைந்த 11 நிறுவனங்களும் நட்டமடைந்துள்ளது. இவற்றை மீட்டெடுக்க தெரியாது நிலையில் உளளனர். அரச சொத்துக்களை விற்கும் திட்டங்களே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பில் பல நிலங்களையும், முக்கியமான இடங்களையும் வெளிநாடுகளுக்கே விற்கப்பட்டு வருகின்றது.

இதனால் சமூகத்தில் பாரிய வெடிப்பொன்று உருவாகப் போகின்றது, இதற்கு ஒரு சில ஊடகங்களும் துணை போகின்றனர். இந்நிலையில் கொரோனாவையும் ஊழலாக மாற்றியுள்ளனர். நாட்டில் பொய்யான பூதமொன்றை உருவாக்கி அதன் மூலமாக மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :